என்ன கண்டுக்கவே ஆள் இல்லை!!

Read Time:8 Minute, 39 Second

sreyaநான்நடிச்சது நாலைஞ்சு படங்கள்தான். ஆனா, ‘பிரமாதமான பெர்ஃபார்மர்’னுபாராட்டுக்கள் குவிஞ்சது. தங்கர் சார், ‘நீதான் அடுத்த நந்திதா தாஸ்’னுசொன்னார். அந்தப் பாராட்டுக்கள் தந்தஉற்சாகத்துல, ‘திமிரு’, ‘வெயில்’, ‘காஞ்சிவரம்’னு நான் நடிச்ச ஒவ்வொருபடத்துக்கும் ஏதோ ஒரு அவார்டுஎதிர்பார்த்தேன். ஆனா, எதுவுமே எனக்குக்கிடைக்கலை.

இமேஜ் பார்க்காமவித்தியாசமா நடிக்கணும்னு வந்த ஒரு சின்னப்பொண்ணைக் கண்டுக்கவே ஆள் இல்லை.அதனால நானும் சினிமாவைக் கண்டுக்கலை. ஆனா, இப்ப இந்தப் படத்துல கமிட்ஆனப்போ, எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன்… ‘இந்தப் படத்துக்கு மட்டும்அவார்டு கிடைக்கலைன்னா, நீங்க எல்லாருமேகாலி…’னு!” ‘டேய்ய்ய்ய்…மாப்ள’ என ‘திமிரு’ படத்தில் இழுத்துச்செருகிய பாவாடையுடன் அதட்டல்போடும்அதே தொனியில் பேசுகிறார் ஸ்ரேயாரெட்டி.

‘சேனல்காம்பியர்’, ‘சேட்டை நடிகை’ எனப் பல கேரக்டர்களுக்குப் பிறகு, விஷாலின்அண்ணன் விக்ரம்கிருஷ்ணாவை மணந்து செட்டில் ஆனவர், இப்போது ‘அண்டாவைக்காணோம்’ படம்மூலம் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கிறார்.நுங்கம்பாக்கம் 99′F ஜிம்மில் நடந்தது சந்திப்பு.

”இது தேனி, உசிலம்பட்டியைச் சுத்தி நடக்கிற கதை. ‘சாந்தி’னு ஒரு சாதாரணப் பொண்ணோடவாழ்க்கை. ஆனா, ஒரு ஹீரோயினுக்கு இப்படிஒரு சப்ஜெக்ட் ரொம்ப ஸ்பெஷல்.டைரக்டர் சுசீந்திரனோட அசோசியேட் வடிவேல்தான்படத்தோட இயக்குநர்.”

”இப்போதைய டிரெண்டுக்கு அடுத்தடுத்து உங்களுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கும்னு நம்புறீங்களா?”
”முதல்ல நான் ஒருஆக்டர். அப்புறம்தான், ஹீரோயின், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எல்லாம். ‘திமிரு’லநான் ஒரு புதுமுகம். ‘ரீமாசென்தான் ஹீரோயின். நீங்க செகண்டு ஹீரோயின்’னுசொன்னாங்க. ‘ஆக்டிங்ல என்னஹீரோயின்… செகண்டு ஹீரோயின்’னு எனக்குப்பயங்கரக் கோபம். ‘ஸ்பாட்டுக்குவர்றேன்டி மாப்ளைகளா.. வந்து என்ன ஆக்டிங்கொடுக்குறேன்னு பாருங்க’னுகிளம்பி வந்தேன். படத்துல ஸ்கோர் பண்ணேனாஇல்லையா?! அப்படி கேமராவுக்குமுன்னாடி யார் பவர்ஃபுல்லா வர்றாங்களோ, அவங்கதான் அந்த சீனுக்கான ஹீரோ, ஹீரோயின். இந்தப் படம் பிடிச்சுருக்கு; நடிக்கிறேன். இப்படி அடுத்தஸ்கிரிப்ட் அமைஞ்சாப் பார்த்துக்கலாம்!”

”பார்ட்டி, ஃபங்ஷன்னாலே கிளாமராத்தான் வருவீங்க. ஆனா, கிளாமர் ஹீரோயினா உங்களைப் பார்த்ததே இல்லையே?”
”சினிமால கிளாமர்தப்புனு நான் சொல்லலை. ஆனா, எனக்குஅது சரிவராது. இத்தனைக்கும் ரியல்லைஃப்ல நான் ரொம்பவே கிளாமர். ‘ஐயோராமா… இந்தப் பொண்ணு ஏன்தான் இப்படிடிரெஸ் பண்ணுதோ’னு விஷால், விக்ரம்எல்லாம் ஜாலியா பதறுவாங்க. ஆனா, அதுரியல் லைஃப்ல மட்டும்தான். டாப் ஸ்டார்ஹீரோயின்களுக்கு என் வயசுதான்இருக்கும். அதனால கிளாமர் பண்றது கஷ்டமேஇல்லை. ஆனா, அந்த கேரக்டருக்குஅது அவசியமா இருக்கணும். ‘அண்டாவைக் காணோம்’ படத்துல தேனி பொண்ணுகேரக்டர். மேக்கப் இல்லாம, காட்டன் ஸாரி கட்டிநடிச்சேன்.”

”கிட்டத்தட்ட 10 வருஷம் முன்னாடி சேனல் காம்பியரிங் பண்ணப்ப இருந்த மாதிரியே இருக்கீங்களே… ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன?”
”ஸ்போர்ட்ஸ் பின்னணி.என் அப்பா பரத் ரெட்டி, கிரிக்கெட் பிளேயர். ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைநான் 100 மீட்டர்ஸ்பிரின்டர். டிஸ்கஸ், ஷாட்புட் எல்லாம்விளையாடுவேன். எக்சர்சைஸ்பண்ணாம இருக்க மாட்டேன். டயட்ல ரொம்பஸ்ட்ரிக்ட். ஏன்னா, எக்சர்சைஸ் வெறும் 20 சதவிகிதம்தான்… மீதி 80 சதவிகிதம் சாப்பாடுதான். மட்டன் சாப்பிடமாட்டேன். சிக்கன், முட்டைவெள்ளைக்கரு, காய்கறி, பழங்கள்… அவ்வளவுதான்.பார்ட்டிக்குப் போனா நோஆல்கஹால், நோ ஸ்மோக்கிங். ஆனா, என் ஒரே பலவீனம்…சாக்லேட்ஸ். எவ்வளவுகன்ட்ரோலா இருந்தாலும் அப்பப்போ கொஞ்சம்சாப்ட்டுர்றேன்!”

”அட…நம்புறமாதிரி ஏதாச்சும் சொல்லுங்க..! எப்போ பார்த்தாலும் ஆர்யா, விஷால்னுபார்ட்டி பண்ணிட்டே இருக்கீங்க… இந்த டயட் எல்லாம் சான்ஸேஇல்லை!”
”அட ராமா…இப்படித்தான் இந்த உலகம் என்னை நம்பவேமாட்டேங்குது. ரொம்ப சின்ன வயசுலஇருந்தே, ஆல்கஹால், ஸ்மோக்கிங் பழகக்கூடாதுனு உறுதியா இருந்தேன். அதைஇப்போ வரை ஃபாலோ பண்றேன். எனக்கு என்உடம்பு முக்கியம். ஏன்னா, வயசைஜாஸ்தியாக்கிக் காட்டுறதுல ஆல்கஹால், புகைக்கு பெரிய ரோல் இருக்கு. ஆனால், நல்லா கிளாமரஸா டிரெஸ் பண்ணிட்டுபார்ட்டி ஹாலுக்குப் போவேன். பத்தேநிமிஷம்… அட்டென்டன்ஸ் போட்டுட்டு ஓடிவந்துருவேன். எல்லாருமே கேலிபண்ணுவாங்க… ‘பார்ட்டில இருந்து எஸ்கேப்ஆகி, வீட்ல டிரெட்மில்ல ஓடிட்டுஇருப்பாங்க’னு!”

”சரி… ஆர்யா, விஷாலுக்கு எல்லாம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாதா?”
”இண்டஸ்ட்ரில யார்மென்டல்னு கேட்டீங்கன்னா, அது அவங்கரெண்டு பேர்தான். ஆர்யாவும் விஷாலும்லூஸுப் பசங்க. சினிமா தவிர வேற எந்தகமிட்மென்ட்டும் வேணாம்னு ஜாலியாத்திரியிறாங்க. ரெண்டு பசங்களும் சேர்ந்துபேச ஆரம்பிச்சா, கூட இருக்கிறவங்கவிழுந்து விழுந்து சிரிப்பாங்க. அந்தஅளவுக்கு ரெண்டு பேருக்கும் சென்ஸ்ஆஃப் ஹ்யூமர் ஜாஸ்தி. விஷால் அம்மாஆர்யாவை எப்பப் பார்த்தாலும், ‘ஏம்பா… எப்பப்பா நீ கல்யாணம் பண்ணிக்கப்போற? நீ கல்யாணம்பண்ணபிறகுதான் என் மகன் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டேஇருக்கான்’னு கேட்பாங்க. அதனால அவங்களைப் பார்த்தாலே ஆர்யா ஓடிருவான்!”

”சினிமாவுல யாரு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?”
”ஐஸ்வர்யா, சௌந்தர்யா.ஃப்ரெண்ட்ஸ்னு சொல்றதைவிடஅக்கா-தங்கச்சினு சொல்லலாம். சின்ன வயசுலஇருந்து போயஸ் கார்டன்ல ஒண்ணாவேவளர்ந்தோம். அப்படியே தனுஷ§ம் நட்புஆனார். அப்புறம்… ஃப்ரெண்டுங்கிறதைத்தாண்டி என்னைப் பிரமிக்கவைக்கிறவர்த்ரிஷா. என்னைவிட ஒரு இன்ச் உயரம்அதிகம். இப்போ வரை அதே ஃபிட்னெஸ்லஇருக்காங்க. அதுதான் த்ரிஷா ஸ்பெஷல்!”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவரத்தில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
Next post திருப்பத்தூரில் நகை அடகு பிடித்து 400 பவுன் மோசடி: கணவன்–மனைவி மீது 50–க்கும் மேற்பட்டோர் புகார்!!