உதட்டுக்குள் உட்செலுத்தப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய தட்டு!!

Read Time:1 Minute, 57 Second

Untitled-3gggggggggஉல­கி­லேயே உதட்­டுக்குள் மிகப் பெரிய தட்­டொன்றை உட்­செ­லுத்­திய பெண் தென் எதி­யோப்­பிய பள்­ளத்­தாக்கு பிராந்­தி­யத்தில் வாழ்­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

எதி­யோப்­பி­யா­வுக்கு ஆவ­ணப்­ப­ட­மொன்றை எடுக்கச் சென்ற அவுஸ்திரேலிய திரைப்­பட தயா­ரிப்­பாளர் ஆபி­ரஹாம் ஜொபி தலை­மை­யி­லான குழு­வினர் மேற்­படி பெண்ணை முதன் முத­லாக கண்­டு­பி­டித்து அது தொடர்பில் அறி­வித்­துள்­ளனர்.

அதயி எலி­கி­டக்னி (20 வயது) என்ற அந்தப் பெண் 59.5 சென்ரிமீற்றர் சுற்­ற­ளவும் 19.5 சென்ரிமீற்றர் விட்­டமும் கொண்ட இறு­கிய களிமண் தட்டை தனது உதட்­டுக்குள் உட்­செ­லுத்­தி­யுள்ளார்.

எதி­யோப்­பி­யாவில் மேற்­படி உதட்­டுக்குள் களிமண் தட்டை உட்­செ­லுத்தும் பாரம்­ப­ரியம் 1896 ஆம் ஆண்­டுக்கு முன்­பி­ருந்து வழக்­கத்தில் உள்­ளது.

தமது கண­வர்மாரை கவர்­வ­தற்­கான வழி­மு­றை­யாக இந்த வழக்­கத்தை எதி­யோப்­பிய பெண்கள் கடைப்­பி­டித்து வரு­கின்­றனர்.

உதட்டில் களிமண் தட்­டு­களை உட்­செ­லுத்­து­வ­தற்கு அந்­நாட்டு அர­சாங்கம் தடை விதித்­துள்ள போதும், பின்தங்­கிய பிராந்­தி­யங்­களில் அந்த வழக்கம் தொடர்ந்து பின்­பற்­றப்­பட்டு வரு­கி­றது.

இதற்கு முன் உதட்­டுக்குள் உட்செலுத் தப்பட்ட மிகப் பெரிய தட்டின் விட்டம் 15 சென்ரிமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!
Next post ஆலங்குளம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை!!