மரண தண்டனை பெற்ற 5 மீனவர்கள் மீட்கப்படுவர் – தமிழக முதல்வர் உறுதி!!

Read Time:3 Minute, 0 Second

5079854132041006853opannirselwam2இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை பெறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பத்தினரிடம், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததாக மீனவர்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பிரசாத், லாங்லெட், வில்சன், அகஸ்டஸ் ஆகிய 5 பேரை போதைப்பொருள் கடத்தியதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்தனர்.

இவர்களுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் சமீபத்தில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினர்.

அவர்களுடன் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழக மீனவ மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். சுமார் 20 நிமிட சந்திப்பின்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து தமிழக மீனவ மக்கள் கூட்டமைப்புத் தலைவர் இருதயமேரி கூறும் போது, 5 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான உத்தரவாதத்தை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டோம்.

இதுபற்றி உடனடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சொல்லி, அவர்கள் அனைவரையும் தாயகத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எந்த காரணத்தை முன்னிட்டும் மீனவர்களை விட்டுக் கொடுக்கமாட்டோம், அவர்கள் விடுதலைபெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம், இது தமிழகத்தின் கௌரவம் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். எனவே, அந்த நம்பிக்கையோடு நாங்கள் வீடு திரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கில் ஆட்சி மாறுமா? முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு!!
Next post 18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது!!