குடிநீர் இன்றி தவிக்கும் மாலைதீவு மக்கள்: நெருக்கடி நிலை பிரகடனம்!!

Read Time:1 Minute, 43 Second

1357678219Untitled-1இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, குடிநீர் வழங்கும் குழாய்கள் மூடப்பட்டுள்ளன.

அந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்பட்டு மக்களுக்கான குடிநீர் விநியோகம் தொடங்க ஐந்து நாட்கள் ஆகும் என்று மாலத்தீவின் அரசும் கூறுகிறது.

இந்நிலையில் இந்தியா, இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அங்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

எனினும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் பிரத்யேகமாக கடல்நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் செயல்பட்டு வருவதால் அவர்கள் யாரும் இந்த நெருக்கடியால் பாதிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை லீட்டருக்கு 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்னை ஒரு லீட்டர் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.!!
Next post ரஜினி, விஜய், ஷங்கரின் சாதனைகளை முறியடித்த அஜீத்!!