ஐ.தே.க பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!
பெல்மடுல்ல பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பெல்மடுல்ல நகரிற்கு சென்றிருந்த வேளை அங்கு வந்த சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த பிரதேசசபை உறுப்பினர் பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.