நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி!!

Read Time:1 Minute, 31 Second

b775545b-e07e-47ea-bcaa-5c9f02e124cd_S_secvpfதனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் இதற்குமுன் ஜெய் நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து நடித்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சிம்பு-வரலட்சுமியை வைத்து போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சென்னையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. அதனால் இதன் படப்பிடிப்பை சென்னையின் முக்கிய இடங்களை சுற்றியே படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ராஜா ராணி மற்றும் கத்தி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் மீண்டும் காரில் பெண் கற்பழிப்பு: கால் டாக்சி டிரைவர் கைது!!
Next post ராஜஸ்தானில் மீண்டும் கொடூரம்: மூதாட்டியை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஊர்வலமாக வரச்செய்து கட்டப்பஞ்சாயத்து!!