நீலகிரி மாவட்டத்தில் 611 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை!!

Read Time:3 Minute, 48 Second

83878056-395e-43c5-90d6-68ec847cec9e_S_secvpfஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1–ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடமும் 2014 டிசம்பர் 1–ந் தேதி ‘‘புதிய எச்.ஐ.வி. தொற்றுகள் இல்லாத தமிழகம், புறக்கணித்தல் இல்லாத தமிழகம், எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகம்’’ என்ற மைய கருத்துடன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

இது தொடர்பாக கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 100 சதவீத கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 611 எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களை இதுநாள் வரை கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு ஏ.ஆர்.டி. என்ற மையத்தில் இலவசமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு விருந்தினர் மாளிகையில் (தமிழகம்) அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மத்தியில் எய்ட்ஸ் பற்றிய உறுதிமொழி, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூலம் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி–வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டுள்ளது. சமபந்தி போஜனத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். மாவட்ட திட்ட மேலாளர் பால்ராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பேச்சுப்போட்டியில் ஆஷா (அ.உ.நி.பள்ளி, சோலூர்மட்டம்) முதலிடத்தையும், நாகராஜ் (அ.மே.நி.ப. கூடலூர்) இரண்டாமிடத்தையும், சந்திப் மேண்டஸ் (புனித ஜோசப் மே.நி.ப. ஊட்டி) மூன்றாமிடத்தையும், சிவா (புனித அந்தோணியார் மே.நி.ப. குன்னூர்) ஆறுதல் பரிசையும் பெற்றனர்.

ஓவியப்போட்டியில் கவுசல்யா (புனித அன்னார் (பெ) மெ.நி.ப. குன்னூர்) முதலிடத்தையும், சசிகுமார் (அ.மே.நி.ப. கோத்தகிரி) இரண்டாம் இடமும், நிதினா (நீலகிரி மெட்ரிக் பள்ளி, எருமாடு) மூன்றாம் இடத்தையும், என்.விக்ரம் (அ.மே.நி.ப. எடக்காடு) ஆறுதல் பரிசையும் பெற்றனர்.

வினாடி–வினா போட்டியில் எஸ்.வினிதா (அ.உ.நி.ப. கடநாடு), ரேஷ்மா (அ.உ.நி.ப. கடநாடு) ஆகியோர் முதலிடத்தையும், தேன்மொழி (புனித மரியன்னை (ம) மே.நி.ப.கோத்தகிரி), ஹரிஷ்மா (புனித மரியன்னை (ம) மே.நி.ப. கோத்தகிரி) ஆகியோர் இரண்டாமிடத்தையும், சரவணன் (அ.உ.நி.ப. தூதூர்மடம்), ஷாஜகான் (அ.உ.நி.ப. தூதூமடம்) ஆகியோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post I LOVE YOU விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா!!
Next post ஒரே இதயம்…உடல் வேறு! ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)!!