டீசல் விலை குறைந்தது பஸ் கட்டணம் குறையுமா?
Read Time:1 Minute, 9 Second
பஸ் கட்டணம் குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார்.
டீசல் லீற்றருக்கு 10 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டண மாற்றம் தொடர்பான தேசிய கொள்கையின் அடிப்படையில் அமைச்சும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் பேச்சுவார்தை நடத்தி வருவதாக சிபி.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எனினும் டீசல் விலை குறைக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating