போதை பொருட்களின் விலை உயர்வு – அஜித் ரோஹண!!
2013ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையில் 500 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சிலர் கூறுவது போல நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றிவளைப்புக்கள் அதிகரித்துள்ளதால் போதைப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.