மீண்டும் கம்யூனிச கருத்துள்ள கதையில் நடிக்கும் கமல்!!

Read Time:1 Minute, 45 Second

30f9ce59-84a3-4635-a11c-7f2b1f203bbe_S_secvpfகம்யூனிச கொள்கைகளை மையமாக வைத்து தயாராகும் புதுபடத்தில் கமலஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் கைவசம் ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’, ‘பாபநாசம்’, ‘உத்தமவில்லன்’ படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

முதலாவதாக ‘உத்தம வில்லன்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2’ படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து கமல் எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

தற்போது அவர் ‘வாமமார்க்கம்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி பரவி உள்ளது. இது கம்யூனிச கதையாம். ஏற்கனவே கமல் நடித்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அன்பே சிவம்’ படங்களில் கம்யூனிச கருத்துக்கள் இருந்தன. அதேபோன்று ‘வாமமார்க்கம்’ படமும் தயாராகிறதாம்.

இதுகுறித்து கமலஹாசன் கூறும்போது, ‘மருதநாயகம்’ போலவே ‘வாமமார்க்கம்’ என்ற பெயரில் படம் எடுக்க வேண்டும் என்பது என் கனவு. வாம என்றால் இடப்பக்கம் என்றும், மார்க்கம் என்றும், மதம் என்றும் அர்த்தமாகும். அரசியல்வாதிகள் இந்த மார்க்கத்தை கம்யூனிசத்துக்கே பயன்படுத்துகிறார்கள் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரக்கோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!
Next post நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசை: அனுஷ்கா!!