சூர்யாவின் மாஸ் எப்போது வௌிவரும்?

Read Time:1 Minute, 20 Second

Untitled-129வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படம் வரும் மார்ச் மாதம் வெளியாகிறது. அஞ்சான் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் மாஸ். இப்படத்தை வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் திகதி வௌியிட முதலில் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், மார்ச் 27-ம் திகதியே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வரும் பொங்கலுக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவிருக்கிறார்கள். மாஸ் படத்தில் பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யா, இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு பிறகு ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம் குமார் இயக்கும் ‘24′ என்கிற படத்தில் நடிக்கிறார் சூர்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடாலூரில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் நடித்து நகை, பணம் கொள்ளை: 4 பேர் கைது!!
Next post ரெயில் தண்டவாளத்தில் 1½ வயது குழந்தையை வைத்த தம்பதி: போலீசார் விசாரணை!!