கஞ்சா கடத்த முற்பட்ட இரு இலங்கையர் உட்பட மூவர் கைது!!
இராமநாதபுரத்தில் இருந்து கஞ்சா கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கஞ்சாவின் பெறுமதி 14.4 மில்லியன் இந்திய ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுதர்ஷன் கே.நிக்கோல்சன் மற்றும் சுரேஷ் ஆகிய இலங்கையைச் சேர்ந்த இருவர் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளுடன் தங்கச்சிமடம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ததாக கூறப்படும் ஏர்காடு பகுதியைச் சேர்ந்த அஹமட் என்பரை பொலிஸார் கைதுசெய்தனர்.