பிகே படத்துக்கு தடை விதிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்!

Read Time:1 Minute, 58 Second

Pk-Posterஅமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என அரியானா மாநில இந்து மகாசபை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரியானா மாநில இந்து மகாசபை பொறுப்பாளர் நரேந்தர் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிகே படத்தில் வரும் சில காட்சிகள் சிவனைப் போன்ற இந்துக் கடவுள்களையும் இந்துக்களையும் அவமதிக்கும் வகையில் மோசமாக உள்ளன.

இந்துக்களை சித்தரிக்கும்போது மட்டும் இவர்கள் கொஞ்சமும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் எல்லாம் காட்சிகளை அமைத்து படம் எடுக்கின்றனர். இதேபோல் மற்ற மதங்களை இவர்கள் ஏன் பேசுவதில்லை? இந்த படத்துக்கு சினிமா தணிக்கை குழுவினர் அனுமதி அளித்திருக்க கூடாது.

பிகே படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்து மதத்தை இழிவுப்படுத்திய அமீர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் நகையை திருடி கீழே தள்ளிய கொள்ளையன்!!
Next post பெண்கள் மீது கமெண்ட் அடிக்க முடியாது!!