ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்–2 மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 43 Second

1803a44a-9980-446b-bf29-c5c576890c62_S_secvpfதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவரது மகள் தீபலட்சுமி (வயது16). தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவருக்கும் தஞ்சாவூர் அருகே வசிக்கும் உறவினரின் மகனுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது.
இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி. குலாமிற்கு மாவட்ட எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் நல்லு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், சைல்டு லைன் துரைராஜ் மற்றும் ராஜாங்கம் ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று மாணவியின் பெற்றோரிடம் விசாரித்ததில் உண்மை என்று தெரிய வந்தது.

பின்பு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும் சட்டப்பூர்வமான தவறு என்பதை விளக்கி கூறி, நடக்க இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள். தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அதிக அளவில் திருமண வயதை எட்டாத பெண்களுக்கு திருமணம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட தம்பி: தந்தையின் அலட்சியத்தால் பலியான உயிர்!!
Next post நங்கநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு!!