காவல் நிலைய கழிவறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!!
அருணாசலப்பிரதேசம் மாநிலம், சங்லாங் மாவட்டத்தை சேர்ந்தவர், பாபு கம்யால்(21). இங்குள்ள சம்பு கிராமத்தை சேர்ந்த புன்லினாங் திலக் என்பவரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய குற்றச்சாட்டின்கீழ் இவரை கைது செய்த மியாவோ பகுதி போலீசார், லாக்அப்பில் அடைத்து வைத்து விசாரித்து வந்தனர்.
கடந்த புதன்கிழமை லாக்அப் அறையின் கழிவறைக்குள் சென்ற பாபு கம்யால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.