குதிரை சவாரியும் கொஞ்சல் யோசனையும்!
குதிரை சவாரி செய்ய பயிற்சி பெற்றார் யோகா நடிகை. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனது கனத்த உடம்பில் இரண்டு கிலோ எடை குறைந்தது. அதனால், குதிரை சவாரியை தனது தினசரி உடற்பயிற்சியாக செய்து வருகிறாராம், அந்த நடிகை.
இவர் குதிரை சவாரி செய்வதை கேள்விப்பட்டு, முப்பத்திரண்டு வயதுக்கு மேல் ஏன் உடம்பை குறைக்கணும்? திருமணம் செய்து கொண்டு கணவர்- குழந்தைகளை கொஞ்ச வேண்டியது தானே என்று கமெண்ட் அடித்தாராம், பரபரப்புக்கு பெயர் போன நடிகை.