விசாரணை கைதி சாவு: 4 போலீசாருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்- டெல்லி கோர்ட்டு தீர்ப்பு!!

Read Time:1 Minute, 48 Second

729fd64a-eae5-4d9c-b656-34a96a1ca130_S_secvpfடெல்லியை சேர்ந்த மகேந்தர் சிங் என்பவரை அலிப்பூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அவர் உயிர் இழந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அலிப்பூர் போலீஸ் நிலைய தலைமை காவலர்கள் பகவானந்த், உஜ்ஜர்சிங், போலீஸ்காரர்கள் ஸ்ரீபால், சியாராம், சமன்லால் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, 1999–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந்தேதி மகேந்தர் சிங்கை குற்றம் சாட்டப்பட்ட 5 போலீசாரும் கள்ள நோட்டு புகார் தொடர்பாக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து கொடூரமாக சித்ரவதை செய்ததில் மகேந்தர்சிங் மரணம் அடைந்துள்ளார். அவரது உடலை சாலையில் வீசிவிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் 2006–ம் ஆண்டு போலீஸ்காரர் சமன்லால் மரணம் அடைந்தார். இதையடுத்து மற்ற 4 போலீசார் மீதும் விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி திக்வினய்சிங் 4 போலீசாருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடும் 7 மாத கர்ப்பிணி!!
Next post ரூ.15 லட்சம் மோசடி செய்த கிறிஸ்தவ மத போதகர் மீது தாக்குதல்: 2 பேர் கைது!!