20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)!!
கனடாவில் இந்த வருடம் Loblaw நிறுவனம் சுமார் 20,000 புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
கனடாவின் மிகப்பெரிய உணவு விற்பனையாளரும் மருந்தியல் நிறுவனமுமான Loblaw, 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்து தனது கடைகளை விரிவாக்கம் செய்வதோடு பல புதிய கடைகளையும் நிறுவ போவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இவ்வாறு 50-புதிய கடைகளை திறப்பதன் மூலம் 5,000 புதிய வேலை வாய்ப்புக்களையும், இன்னுமொரு 100 கடைகளை புனரமைத்தல் செய்து அதன் மூலமும் புதிய கடைகளை ஆரம்பிப்பதன் காரணமாக வர்த்தகம் மற்றும் கட்டுமான பணிகளினால் 15,000 வேலை வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவை சார்ந்த பல்பொருள் அங்காடியான ராகெற் தனது 133 கடைகளையும் விற்று விட்டு கனடாவை விட்டு வெளியேறுவதால் Loblaw வும் வால்மார்ட்டும் சிலவற்றை வாங்குகின்றன என கூறப்படுகிறது.