தேர்வில் தோல்வி பயம்: பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!
கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (50) இவரது மகன் விஷ்ணுகாந்தன் (16). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 18–ந்தேதி கணக்கு பரீட்சை எழுதினார். பின்னர் வீடு திரும்பினார். வீட்டில் உள்ளவர்களிடம் விஷ்ணு காந்தன் தான் சரியாக பரீட்சை எழுதவில்லை என்று கூறி அழுதார். அவரை எல்லோரும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது விஷ்ணு காந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.