By 23 March 2015 0 Comments

முத்த காட்சியும் முடியாது.. சாரியோட நனையவும் முடியாது..!!

apseeதமிழில் ‘ஆடுகளம்’, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ படங்களில் நடித்து பிரபலமான டாப்சி தற்போது லாரன்சுடன் ‘காஞ்சனா 2’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா இயக்கும் வைராஜா வை படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் ஒரு படம் கைவசம் உள்ளது. கவர்ச்சியாக நடிக்க டாப்சி மறுத்து வருகிறார். நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து உள்ளார்.

முத்த காட்சிகளில் நடிக்கவும் உடன்பாடு இல்லை என்று கூறி உள்ளார். அது மாதிரி நடிக்க வற்புறுத்தும் படங்களையும் தவிர்க்கிறார். சமீபத்தில் இந்தி படமொன்றில் அவர் நடித்துக் கொண்டு இருந்தபோது வெள்ளை சேலை உடுத்தி மழையில் நனைவது போன்ற காட்சியை எடுக்க இயக்குனர் விரும்பினார்.

இதற்காக அவரிடம் வெள்ளை சேலை கொடுக்கப்பட்டது. அந்த சேலையை உடுத்திக் கொண்டு நனைந்தால் உடம்பு முழுவதும் தெரிந்து, ஆபாசமாக இருக்கும் என்று கூறி அப்படி நடிக்க மறுத்து விட்டார். பிறகு சிவப்பு நிற சேலையை கொடுத்தனர். அதை உடுத்திக் கொண்டு மழையில் நனைந்து நடித்தார்.



Post a Comment

Protected by WP Anti Spam