தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது!!
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில் சம்பவத்தன்று தேர்வு நடந்தது. அப்போது பி.எஸ்சி மாணவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காப்பி அடித்தனர். இதனை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த பேராசிரியர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினார்கள்.
இதுதொடர்பாக பேராசிரியர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராகுல் யாதவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மற்ற மாணவர்களை தேடி வருகிறார்கள். இந்தநிலையில், பேராசிரியரை மாணவர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.