அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: பெண் புரோக்கர்கள் உள்பட 21 பேர் கைது!!
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது,.
போலீசார் அங்கு மாறுவேடத்தில் சென்று விசாரித்தபோது விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய ஆயிரம் விளக்கை சேர்ந்த செல்வத்தை கைது செய்தனர்.
இதேபோல் கோயம்பேடு, சத்யா நகர் மற்றும் மேடவாக்கத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபசாரம் செய்த சம்சாது, மடிப்பாக்கம் சுனில்ராஜ் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து விபசார தொழிலில் ஈடுபட இருந்த 4 வெளிமாநில அழகிகள் மீட்கப்பட்டனர்.
கீழ்ப்பாக்கம், நெற்குன்றம், அயனாவரம், காணாத்தூர், வானகரம், குரோம்பேட்டை உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விபசார தொழில் நடத்திய புரோக்கர்கள் கோவை பாலசுப்பிரமணியன், புதுக்கோட்டை ரவி, அமைந்தகரை சத்தியா, கே.கே.நகர் ராதா, பெரியமேடு சுதாகர் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து விபசார தொழிலில் ஈடுபட இருந்த 21 வெளிமாநில அழகிகள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் உள்பட 21 புரோக்கர்களும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட 25 இளம்பெண்களும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.