கொருக்குபேட்டையில் 82 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி!!
கொருக்குபேட்டை மீனம்மாள் நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சாரதாம்பாள் (82). இவர் தனது மகன் மகாலிங்கத்துடன் தனியாக வசித்து வந்தார்.
நேற்று மகாலிங்கம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சாரதாம்பாள் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் வந்தார். அவர் நேராக சாரதாம்பாள் வீட்டிற்கு சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த சாரதாம்பாளை கட்டிபிடித்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் சாரதாம்பாள் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து ஆர்.கே. நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பிடிபட்டவர் கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகரைச் சேர்ந்த சரவணன் (24) என்பதும் அவர் குடிபோதையில் மூதாட்டியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சாரதாம்பாள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.