சென்னை விமான நிலையத்தில் 150 பவுன் நகையை உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்தவர் கைது!!
நேற்று இரவு 12.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. அதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு பயணியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது.
அவரை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் தங்க நகையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அவரது உள்ளாடையில் மொத்தம் 150 பவுன் நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.36 லட்சம். இதையடுத்து அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உள்ளாடையில் மறைத்து நகைகளை கொண்டு வந்தவரின் பெயர் முத்து (32). ராமநாதபுரத்தை சேர்ந்தவர். அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.