வேலூர்: பெற்றோரால் நிச்சயித்து நின்ற திருமணம் காதலில் ஒன்று சேர்ந்தது!!

Read Time:2 Minute, 33 Second

f504b1bc-8c71-4f6c-be55-09d0e0dceea0_S_secvpfஅணைக்கட்டு பகுதியில் உள்ள கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 31). இவர் அணைக்கட்டு பஜாரில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியில் உள்ள அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த வரதராஜ் மகள் பிரியாவுக்கும் (வயது 28) திருமணம் செய்ய கடந்த ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் நிச்சயம் செய்யப்பட்ட பின்னர் ஜாதகம் சரியில்லை எனக் கூறப்பட்டதால் இவர்களது திருமணம் நின்றது.

அதன்பின்னர் சில நாட்களில் பூபாலனும், பிரியாவும் செல்போன் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். ஜாதகம் சரியில்லாமல் திருமணம் நிறுத்தப்பட்டாலும் இவர்கள் மனதார ஒருவரையொருவர் விரும்பினர். இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு காதலை வளர்த்தனர்.

இதனிடையே பூபாலனுக்கு அவரது உறவினர்கள் ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அந்த திருமணத்தை வருகிற 1–ந் தேதி ஒரு மாதத்திற்குள் நடத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

அந்த தகவல் பிரியாவுக்கு தெரிய வரவே அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பூபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஜாதகம் சரியில்லை என பிரியாவுடன் நடத்த இருந்த திருமணத்துக்கு பெற்றோர் தடை போட்டாலும், மனதளவில் காதலித்ததால் அவரையே திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பதாக பூபாலன் தெரிவித்தார். இதனையடுத்து அவர் பிரியாவை திருமணம் செய்ய சம்மதித்தார்.

அதன்படி நாள், நட்சத்திரம், நேரம் என பார்க்காமல் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அணைக்கட்டு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. மணமக்களை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்து மத விழாவில் பணத்தை வாரி இறைத்த பா.ஜ.க பெண் எம்.பி – வீடியோ பரவியதால் சர்ச்சை!!
Next post விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று மேலும் ஒரு குழந்தை சாவு!!