இந்தியாவில், ஆண்டுக்கு 1.2 லட்சம் பேர் தற்கொலை மனநிலை பாதிப்பு காரணம்

Read Time:2 Minute, 47 Second

anisucide.gifஇந்தியாவில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர், தற்கொலை செய்து கொள்கின்றனர். மனநிலை பாதிப்பு தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகம் இறங்கியுள்ளது. தற்கொலை முயற்சியில் இறங்குவோர் எண்ணிக்கை, ஆண்டுக்கு நான்கு லட்சம். இவர்களின் இந்த முடிவுக்கு காரணம், மன அழுத்தமும், மனநிலை பாதிப்பும் தான். கடந்த 2000ம் ஆண்டில், உலகில், தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சம். ஒரு லட்சம் பேரில், சராசரியாக 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒவ்வொரு 40 நொடியிலும், ஒரு தற்கொலை நடக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில், தற்கொலை எண்ணிக்கை, இந்தியாவில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் மரணம் அடைய முக்கிய மூன்று காரணங்களில் தற்கொலையும் ஒன்று. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக உள்ளது. இளைய தலைமுறையினரிடம் அதிகமாக உள்ள மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில், 8 சதவீதம் பேருக்கு மன நிலை பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இவர்களுக்கு போதிய அளவில், ஆலோசனை கூறவும், தீர்வு காணவும், போதுமான அளவில், மனோதத்துவ டாக்டர்கள் இல்லை. மொத்தம் 3,300 மனோதத்துவ டாக்டர்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளனர். இவர்களில், மூன்றாயிரம் பேர், சென்னை உட்பட நான்கு பெரு நகரங்களில் உள்ளனர். மாவட்டங்களில் மனோதத்துவ டாக்டர்கள் மிகக்குறைவாகவே உள்ளனர். இந்தியாவுக்கு 32 ஆயிரம் மனோதத்துவ டாக்டர்கள் தேவை. இது குறித்து மத்திய சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “ஒன்பது லட்சம் பெண்களுக்கு, மனோதத்துவ அடிப்படையில் சிகிச்சை தேவைப்படுகிறது. இவர்களில், 10 முதல் 29 வயதிலான பெண்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 80 ஆயிரம். 30 வயதில் இருந்து 50 வரை உள்ளவர்கள் எண்ணிக்கை இரண்டரை லட்சம்’ என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post டயானாவின் மரண விசாரணையில் திடீர் திருப்பம் பிரிட்டிஷ் முகவர்களின் சதிச்செயலென குற்றச்சாட்டு
Next post சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் உயர் விருதைப் பெறுகிறார் தலாய் லாமா