தேனி அருகே பள்ளி மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

Read Time:1 Minute, 35 Second

7c0bcd7c-81be-402b-8fbe-1fb4ab5ec490_S_secvpfதேனி மாவட்டம் போடி வினோபாஜிகாலனியை சேர்ந்தவர் காயத்ரி (வயது16) பள்ளிமாணவி. 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்தனர். போடி கம்பர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு காயத்ரியை திருமணம் செய்து கொடுக்க பேசி முடிக்கப்பட்டது. வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமண தேதியை நிச்சயம் செய்தனர்.

இதுகுறித்து தேனி குழந்தைகள் நல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்றனர். மாணவி காயத்ரியின் பெற்றோரை சந்தித்து குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூறினர். மேலும் பெண்களுக்கு 18 வயது முடிந்தபின்னரே திருமணம் முடிக்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதையடுத்து காயத்ரியின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகளிடம் உறுதி அளித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் காயத்ரியின் படிப்புக்கு ஏற்பட இருந்த பாதிப்பு நீங்கியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்கரன்கோவிலில் 2 குழந்தைகளின் தாயை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!
Next post காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!