இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்…!!
‘சென்னை 600 028′ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கும் உதவி இயக்குனராக உள்ள பெரோஸ் முகமதுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். விஜயலட்சுமி, பெரோஸ் முகமது திருமணம் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கவுள்ளது.
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரைத் விஜயலட்சுமி திருமணம் செய்துகொள்வதால் விரைவில் மதம் மாறிவிடுவார் என்று செய்தி வெளியாகி வந்தது.
இது குறித்து விஜயலட்சுமி கூறும்போது, பெரோசும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக உள்ளோம். எங்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டார்கள்.
பெரோஸ், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நான் மதம் மாறவில்லை. இந்த விஷயத்தில் இருவரும் தெளிவாக இருக்கிறோம். நான் நானாக இருப்பேன். அவர் அவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு மதம் மாறமாட்டேன், என்றார்.
திருமணம் நிச்சயமாகிவிட்டதால் விஜயலட்சுமி சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார். இனி படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாகவும், இவர் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Average Rating