கர்நாடக லோக் ஆயுக்தாவில் அதிரடி: போலீஸ் உயர் அதிகாரிகளாக 4 பெண்கள் நியமனம்!!

Read Time:1 Minute, 33 Second

834c2ce1-1736-4199-9801-074d79465bee_S_secvpfஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் கர்நாடக லோக் ஆயுக்தா நாட்டிலேயே முதன்மை இடத்தை வகிக்கின்றது.

இதில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அந்த அமைப்புக்கு முதல்முறையாக 4 பெண் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உயரதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். லோக் ஆயுக்தா போலீசில் இடம் கிடைப்பது மிகவும் சாதாரண விஷயமல்ல. பணத்தை கொண்டோ அல்லது வேறு வகையிலோ இப்பதவியை அடைய முடியாது. மிகச்சிறப்பாக பணியாற்றியவர்கள், ஈர்க்கதக்க சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே இதில் இடம் கிடைக்கும்.

அந்த வகையில் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தற்போது இடம் அளிக்கப்பட்டுள்ளது. சோனியா நரங், எம். அஸ்வினி, கே.பி. அஞ்சலி மற்றும் சீமா லட்கர் ஆகிய நான்கு பேரும் லோக் ஆயுக்தா எஸ்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் பெண்கள் வலிமை மிக்கவர்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக லோக் ஆயுக்தா நீதிபதி சுபாஷ் பி ஆதி கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய கொள்ளையர்கள்!!
Next post கேரளாவில் காதலியை கடத்தி கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் கைது!!