புதிய கூட்டணியை நம்பி கூட்டமைப்பை கைவிட்ட குணசேகரவுக்கு நேர்ந்த கதி!!

Read Time:1 Minute, 59 Second

1194368440Untitled-1ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனு பட்டியலில் இருந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏர்ள் குணசேகர, விலகியுள்ளார்.

இதனை அவர் சத்திய கடதாசி மூலமாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூ்டடமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசியக் முன்னணியின் சார்பில் யானைச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், ஏர்ள் குணசேகர இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அடுத்தே அவர் கூட்டமைப்பின் வேட்புமனுப் பட்டியலில் இருந்து விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணையும் கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் குணசேகர கலந்து கொண்டிருந்த போதிலும் அவருக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தனக்கு வேட்பு மனு கிடைக்காது போனால் அரசியலில் இருந்து விலகப் போவதாக ஏர்ள் குணசேகர அத தெரணவிடம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் மௌலானா!
Next post இலங்கைப் பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் பலி!!