தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!
யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
“ஆவணி மாதத்தில் முக்கிய நிகழ்வுகளாக தேர்தல் நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் யாழ். மாவட்டத்தில் அமைதியான சூழல் பேணப்பட வேண்டும். அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்ற காரணங்களைக் காட்டி நீதிபதி பிணை மனுவை நிராகரித்தார்.
மேலும், பிணை மனுவை விசாரிப்பதற்கு செப்டெம்பர் மாதம் 22ம் திகதி என்ற நீண்ட இடைவெளியிலான தவணையையும் வழங்கினார்.