வவுனியாவில் பண்டாரவன்னியன் நினைவு நிகழ்வு!!
தேசிய வீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது ஞாபகார்த்த விழா இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெறுகிறது.பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வு காலை 8 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலுடன் ஆரம்பித்திருந்தது.
இதன் போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம், முன்னாள் நகரசபை உபதலைவர் க.சந்திலகுலசிங்கம், எனப் பலரும் மாலர் மாலை அணிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.