3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த எகிப்து மன்னரின் பதப்படுத்திய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

Read Time:2 Minute, 37 Second

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த எகிப்து நாட்டு மன்னரின் பதப்படுத்தப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. எகிப்து நாடு பிரமிடுகளுக்கு புகழ் பெற்றது. இறந்த மன்னர்களின் உடல்களை பதப்படுத்தி இந்த பிரமிடுகளின் அடியில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள். இப்படி பதப்படுத்திய உடல்கள் பலநூறு ஆண்டுகளுக்கு மேலாக கெடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எகிப்து நாட்டின் புகழ்பெற்ற பாரோ மன்னர் டுட் 19 வயதில் மரணம் அடைந்தார். அவரின் வாழ்க்கையும் மரணமும் எகிப்து நாட்டு மக்களால் 100 ஆண்டுகாலத்துக்கு பேசப்பட்டது. அவர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். அவர் உடல் அவரது கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. கெய்ரோவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள லக்சர் பகுதியில் அது புதைக்கப்பட்டு இருந்தது. இதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர். பதப்படுத்தப்பட்ட அவரது முகத்தில் தங்க கவசம் மற்றும் சில மூலிகைப் பொருள்களால் சுற்றப்பட்டு இருந்தது. அதை தனியாக பிரித்து எடுக்கும் போது பதப்படுத்தப்பட்ட உடலுக்கு சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. கல்லறையில் தோண்டி எடுத்த போது பதப்படுத்தப்பட்ட உடல் 18 துண்டுகளாக உடைந்தது. அவற்றை விஞ்ஞானிகள் ஒன்று சேர்த்தனர். பிறகு அது சி.டி.ஸ்கேன் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. தரைக்கு அடியில் அமைக்கப்பட்ட அறையில் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இது பிறகு லண்டனில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. பிறகு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் மிïசியத்திலும் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கரூரில் காதல் காசுகளால் பரபரப்பு
Next post 13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயற்சி; தாய்-தந்தை உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை