நெற் கொள்வனவிற்கு 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது!!
இந்த முறை பருவகால நெற்களை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 6000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விவசாயிகள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நெற்களை கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதும் 170 களஞ்சியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெற்கொள்வனவு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு துறையினரையும் இணைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பழுதடைந்த மற்றும் பழைய நெற்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று விவசாயிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதி நெற்களஞ்சியமாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.