புதிய உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்…!!

Read Time:2 Minute, 10 Second

new-500x500டைனோசார்கள் புவியிலிருந்து முற்றாக அழிந்த பிறகு, பாலுட்டிகள் எப்படி வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை அறிந்துகொள்ள உதவும் புதிய உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தப் புதிய உயிரினம் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தன, அவை பார்ப்பதற்கு நிலத்திலும் நீரிலும் வாழும் நீர்நாயைப் போலவே இருந்தன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ பகுதியிலுள்ள கிம்பெர்டோ வால்ஷ் பகுதியில் இந்த உயிரினத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு கிம்பெர்டோப்சாலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் எலிகளின் குடும்பத்துடன் தொடர்புடையது, அவை குறுஞ்கோள் ஒன்று புவியின் மீது மோதியதால் டைனோசார்கள் முற்றாக அழிந்து போகும் முன்னரே தோன்றின எனத் தெரியவந்துள்ளன என இதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவை தமது முன்னோர்களை விட பெரியதாக இருந்தன எனக் கூறும் அமெரிக்கா மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், டைனோசார்கள் மறைந்த பிறகு அந்தச் சூழலை தமக்கு எப்படி பாலூட்டிகள் சாதகமகப் பயன்படுத்திக் கொண்டன என்பதை இந்த உயிரினம் காண்பிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு லின்னியன் சொசையிட்டியின் விலங்கியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள் நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை…!!
Next post மெக்டோனால்ட் உணவகத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: 7 மணிநேரம் வரை யாரும் கண்டுகொள்ளாத அவலம்…!!