போலந்து நாட்டில் புதிய பிரதமர் பதவி ஏற்றார்
போலந்து நாட்டில் ஜரோஸ்லா கக்சின்ஸ்கி பிரதமராக பதவி ஏற்றார். இரட்டையர்களில் ஒருவரான அவரது அண்ணன் தான் ஜனாதிபதியாக இருக்கிறார். லீச் கக்சின்ஸ்கி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரது சட்டம் மற்றும் நீதிக்கட்சியைச்சேர்ந்த கசிமீர்ஸ் கடந்த வாரம் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜரோஸ்லா பிரதமர் ஆனார்.
இவர் இதற்கு முன்பு எந்தப்பதவியிலும் இருந்தது இல்லை. புதிய அரசு வருகிற புதன்கிழமை நம்பிக்கை ஓட்டு எடுப்பில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.