மூன்று விசாரணைகளின் அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர்..!!

Read Time:1 Minute, 54 Second

imagesஇலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்சவினால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வல் பரணகம ஆணைக் குழு, நிசங்க உடலகம ஆணைக் குழு ஆகியவற்றின் அறிக்கைளே நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ஐ.நா மனித உரிமைகள் சபை யில் நிறைவேற்றபப்பட்ட தீர்மானம் தொடர்பாக, நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையிலேயே, இந்த அறிக்கைகளை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.இதேவேளை, ஜெனிவாவில் இலங்கையின்அனுசரணையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.அதற்கு தீர்மானத்தின் பிரதியை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தளவில் காணாமற் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!
Next post இலங்கைப் பிரஜை கனடாவில் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமனம்..!!