தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் வயோதிபர் பலி! 4 படையினர் படுகாயம்.
Read Time:55 Second
தென்மராட்சி கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு அருகில் படையினர் பயணித்த வானத்தை இலக்கு வைத்து கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு வெடிக்க வைக்கப்பட்டு்ள்ள கிளைமோர் தாக்குதலில் வாகனத்தில் பயணித்த நான்கு சிறீலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் சிக்கி நாகராச என்ற பொதுமகன் பலியாகியுள்ளார். அதேநேரம் கந்தசாமி என்பவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலையடுத்து படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகின்றது.