ஜப்பான் மன்னர் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறக்குமா?
Read Time:1 Minute, 23 Second
ஜப்பான் மன்னர் அகிகிட்டோ வின் இளையமகனின் மனைவி கிகோ கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. 39 வயதான அவருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் அறுவைச்சிகிச்சை மூலம்தான் குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். இவருக்கு பிறப்பதாவது ஆண் குழந்தையாக இருக்கவேண்டும் என்று அரச குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
ஏனெனில் மன்னரின் மூத்தமகனான நாருகிட்டோ வுக்கு ஒரே ஒரு பெண்குழந்தைதான். 1965-ம் ஆண்டு முதல் அரச குடும்பத்தில் ஆண்குழந்தையே கிடையாது.
ஆண் குழந்தை இல்லாததால் பெண்களும் ஆட்சிக்கு வரலாம் என்று வாரிசுச்சட்டத்தை திருத்த அரசகுடும்பம் திட்டமிட்டு உள்ளது. கிகோவுக்கு ஆண்குழந்தை பிறந்தால் இந்தசட்டத்தை திருத்தவேண்டிய தேவை இருக்காது என்று அரண்மனை அதிகாரிகள் கூறுகிறார்கள்.