பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிருக்கு பிடிவாரண்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர். அப்போது அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்த சொத்துக்கணக்கில் தவறான தகவல் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையின்போது கோர்ட்டுக்கு வருமாறு பெனாசிருக்கும், அவரது கணவருக்கும் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் வெளிநாட்டில் வசித்து வருவதால் வழக்கு விசாரணையின்போது இருவரும் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து இருவர் மீதும் ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
இதன்படி, பெனாசிரும், அவரது கணவரும் பாகிஸ்தானுக்கு வந்தால் கைது செய்யப்படுவார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு திரும்புவேன் என்று பெனாசிர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.