வடக்கில் 5ம் திகதி விஷேட பாடசாலை நாள்…!!

Read Time:1 Minute, 51 Second

413658348Untitled-1வட மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 5ம் திகதி சனிக்கிழமை திறக்கப்படும் என அம் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 26ம் திகதி, கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து உயர்தர வகுப்பு மாணவனான இராஜேஸ்வரன் செந்தூரன் உயிரிழந்திருந்தார்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே இம் மாணவன் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெரியவந்தது.

இதனால், அந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த 27ம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் வழங்கப்பட்ட விடுமுறைக்கான பதில் பாடசாலையானது எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என வடமாகாண கல்வி, விளையாட்டு பண்பாட்டலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும் அன்றைய தினமே வடமாகாண பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.

நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 4ம் திகதி மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்…!!
Next post முதலிரவை பாலுடன் தொடங்குவது ஏன்?