ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர்…!!
கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய தினத்திலேயே உரிய நேரத்தில் வேலைத்தலத்துக்கு செல்லாமல் இருப்பவர்கள் அநேகம்.
ஆனால், பிரேஸிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது விடுமுறை நாளில் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்கு சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இயன் ஆப்ரஹாம்ஸ் எனும் இந்த ஊடகவியலாளர் 24 வருடங்களாக விளையாட்டுத்துறை நிருபராக விளங்குபவர்.
பிரேஸிலின் டோக் ஸ்பேர்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றும் அவர், நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், “இன்று உங்கள் கடமை நாள் அல்ல” எனக் கூறியபோது பெரும் சங்கடத்துக்குள்ளானார் ஆப்ரஹாம்ஸ்.
இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.
இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை என்பதால் நான் வந்தேன் என அவ்வீடியோவில் இயன் ஆப்ரஹாம்ஸ் கூறுகிறார்.
“இல்லையே இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை” என பெண் ஒருவர் கூறுவது அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.
Average Rating