பாகிஸ்தானில் கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேர் தூக்கிலிடப்பட்டனர்
Read Time:1 Minute, 10 Second
பாகிஸ்தானில் உள்ள ஷேக்கப்புரா நகரில் வசிக்கும் 3 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கடந்த 2000-ம் ஆண்டு கற்பழித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தது. இந்தத்தண்டனையை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஜனாதிபதிக்கும் அவர்கள் கருணைமனு தாக்கல் செய்தனர். அதையும் ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதைத்தொடர்ந்து இந்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனை நேற்று லாகூர் சிறையில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் சேர்த்து இந்த ஒரு மாதத்தில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆகும். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 207 பெண்கள் கூட்டமாகச்சேர்ந்து கற்பழிக்கப்பட்டனர்.