மூட்டு வலியை குணப்படுத்தும் கூத்தன் குதம்பை…!!

Read Time:4 Minute, 36 Second

ht4058-615x525புண்களை ஆற்றக் கூடியதும், விஷத் தன்மையை முறிக்கவல்லதும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், மூட்டு வலியை போக்கவல்லதும், சளி, இருமலுக்கு மருந்தாக அமைவதுமான கூத்தன் குதம்பை செடி பல மருத்துவ பயன்களை கொண்டது.
கூத்தன் குதம்பை செடியானது புதர்போல் சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும்.

இதற்கு மூக்குத்தி பூ என்ற பெயரும் உண்டு. வளைந்த மற்றும் கூரிய முட்களை இருக்கும் என்பதால், இந்த செடியை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் பூக்கள் இருக்கும். காய்கள் மிளகை போன்று காணப்படும். காய்கள் விஷத்தன்மை உடையாதால் இதை சாப்பிடக் கூடாது. சிறுசிறு பூக்களை கொண்ட இந்த செடியில் உள்ள காய்கள் திராட்சை கொத்து போன்று இருக்கும்.

பழங்கள் கருப்பு நிறத்தில் காணப்படும். கூத்தன் குதம்பை செடி பல்வேறு நன்மைகளை கொண்டது.

வயிறு, சிறுநீர் பை, கருப்பை போன்றவற்றில் விட்டுவிட்டு ஏற்படும் கடும் வலியை போக்கும். வீக்கத்தை கரைக்க கூடியது. விஷத்தை தணிக்க வல்லது. கூத்தன் குதம்பையின் பூக்கள், இலைகளை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம். 3 முதல் 5 இலைகள், 20 பூக்களுடன், சிறிது பனங்கற்கண்டு, அரை ஸ்பூன் தனியா சேர்க்கவும். இதில் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி குடிக்கலாம்.

இது பால்வினை நோய்க்கு மருந்தாகிறது. புண்களை ஆற்றுவதுடன், கடும் ஜுரத்தை போக்கும். மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை சரிசெய்யும். வயிற்று வலியை குணப்படுத்தும். மாதவிலக்கின்போது அடிவயிற்றில் ஏற்படும் வலியை போக்கும்.

கூத்தன் குதம்பை இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான அளவு தேங்காய் எண்ணெயுடன், இலை பசையை சேர்த்து குழம்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும்.

இதை மேல்பூச்சாக பயன்படுத்தினால் புண்கள் சீக்கிரம் ஆறும். புண்கள் சீல் பிடிக்காமல் இருக்கும். வெட்டுக் காயங்களை வடு இல்லாமல் ஆற்றும். வீக்கம் தரும் காயங்கள் மற்றும் கொப்புளங்களை குணப்படுத்தும். அழகான தோற்றத்தை உடைய இந்த செடியானது பாம்பு, கருந்தேள் மற்றும் செந்தேள் கடித்தால் ஏற்படும் விஷத்தை போக்கும் தன்மை கொண்டது.

கூத்தன் குதம்பை இலைகள், பூக்களை பயன்படுத்தி புண்களை கழுவும் மருந்து தயாரிக்கலாம். இலைகள், பூக்களுடன் மஞ்சள் பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி எடுக்கவும். இருமல், சளி இருக்கும்போது ஆவி பிடிக்கலாம். இதனால் தலைவலி சரியாகும். இதைக்கொண்டு கழுவுவதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும்.

குளிப்பதால் உடலில் இருக்கும் துர்நாற்றம் விலகும். அம்மை கொப்பளங்கள் ஆறும். கூத்தன் குதம்பை, வலிப்பு நோயை தடுக்க கூடிய தன்மை கொண்டது. நீரிழிவு, கேன்சர் வராமல் தடுக்கும். பூஞ்சை காளான்கள், நோய் நீக்கியாக பயன்படுகிறது. காய்ச்சலை போக்க கூடியது. இதை அழக்குக்கான தாவரமாக பயன்படுத்தலாம். விஷத்தன்மை இருப்பதால் இந்த செடியை அதிகளவில் எடுத்துக்கொள்ள கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் என்ஜினீயரிங் மாணவர் தீக்குளித்து தற்கொலை..!!
Next post இந்தக் குழந்தைகளின் குறும்பு தனத்தை கொஞ்சம் பாருங்களேன்…!!