ஓமலூர் பகுதிக்கு 5 கால்களுடன் வந்த அதிசய கன்றுக்குட்டி…!!

Read Time:1 Minute, 50 Second

8a4e6fc8-5a21-4fa2-b62a-3e3206c43a9d_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சாய்பாபா பக்தர் ஒருவர் 5 கால்கள் உள்ள பசுமாட்டு கன்றுவை அழைத்து வந்தார். அந்த பசு கன்றுவை பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். சராசரியாக பசுக்களுக்கு நான்கு கால்கள் மட்டுமே இருப்பது வழக்கம் அதிசயமாக 5 கால்கள் மற்றும் இரண்டு தலை என்று லட்சத்தில் ஒரு பசு கன்று ஈன்றுவது வழக்கம். அப்படி அதிசயமாக வரும் கன்றுக்குட்டி குறைந்த காலத்தில் இறந்து விடுகிறது.

தற்போது காடையாம்பட்டி பகுதிக்கு வந்திருக்கும் இந்த பசுமாட்டின் கன்றுக்கு பசுவின் திமில் பகுதியில் ஒரு கால் உள்ளது. அந்த பசு கன்று ஆரோக்கியமாக உள்ளது. இந்த பசுக்கன்றுவை ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபா பக்தர் ஒருவர் கொண்டு வந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக காடையாம்பட்டி பகுதியில் தங்கி பசு கன்றுவை தினமும் வீடு வீடாக அழைத்து சென்ற அவர் தற்போது ஓமலூர் பகுதிக்கு வந்து உள்ளார். இதே போன்று தமிழகம் முழுவதும் சென்று வருகிறார். அந்த பசு கன்றுக்கு பொதுமக்கள் பூஜை செய்து கன்றுகுட்டிக்கு பழம் மற்றும் பொங்கல் உள்ளிட்டவைகளை ஊட்டுகின்றனர். கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளியல் அறையில் கேமரா பொருத்தி இளம்பெண்கள் குளிப்பதை ரசித்த வீட்டு உரிமையாளர்…!!
Next post வள்ளியூரில் நடுரோட்டில் கழன்று ஓடிய அரசு பஸ் சக்கரம்…!!