ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!

Read Time:1 Minute, 35 Second

9a41dde4-e075-423f-850f-47ac70a7230e_S_secvpfஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுபற்றி ஈராக்கிற்கான ஐ.நா. உதவி அமைப்பு (யுனாமி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதம் நடந்த சண்டை மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 980 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் மட்டும் 506 பேர். மீதமுள்ளவர்கள் குர்து பெஷ்மெர்கா மற்றும் துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர். அதற்கு முந்தைய மாதத்தில் 888 பேர் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் மாதத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணம் பாக்தாத் தான். இங்கு மட்டும் 261 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து நைனிவா மாகாணத்தில் 68 பேர் பலியாகி உள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ். வசம் உள்ள அன்பர் மாகாணத்தில் 124 பேர் இறந்துள்ளனர். கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக அங்கு துல்லியமான பதிவுகளை பெற முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!
Next post அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!