ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!

Read Time:3 Minute, 5 Second

05c5a20b-83e5-4920-9732-f12c3c79f3fe_S_secvpfஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

தென் ஆப்பிரிக்காவின் புமலங்கா நகரைச் சேர்ந்த ஹம்ரி கோசா(25) என்ற வாலிபன் சில தினங்களுக்கு முன், தான் வழக்கமாக செல்லும் உள்ளூர் பாருக்கு சென்றிருந்தான். திடீரென பாருக்குள், கையில் பாட்டிலுடன் நுழைந்த அவனது பெண் தோழி கண்ணிமைக்கும் நேரத்தில் “நாயே….!” என்று ஆவேசமாகக் கத்தியபடி, பாட்டிலில் இருந்த அமிலத்தை அவனது அடிவயிற்றில் ஊற்றினார்.

அவனது தசை கருகும் வாடை அந்த பார் முழுவதும் வீசியது. வலியில் அலறிய அந்த வாலிபனை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் கோசாவின் மர்ம உறுப்பு நிரந்தரமாக சேதமடைந்து விட்டதாகவும், இனி அவரால் பைப் மூலமாகத்தான் சிறுநீர் கூட கழிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிட் ஊற்றுவதற்கு முன்பாக அந்தப் பெண் “இப்படி ஒரு கொடூரத்தை எனக்கு செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று கேட்டபோதுதான் கோசாவுக்கு நடந்தது அனைத்தும் புரிந்தது, ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

முன்னர் ஒரு முறை அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட கோசா, அதை வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளான். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரவும் அந்த வீடியோவைப் பார்த்த ஆத்திரத்தில்தான் அந்தப் பெண் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார்.

ஆனால், சுய நினைவு திரும்பிய கோசா, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் தான் உலவவிடவில்லை என்று ஆன்லைன் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார். தான் அவனது மர்ம உறுப்பை சிதைக்கும் நோக்கத்தோடு இதைச் செய்யவில்லை என்றும் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தால் இப்படி நடந்து கொண்டு விட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!
Next post துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!