வெவ்வேறு வருடத்தில் பிறந்த ஒரே இரட்டைக் குழந்தைகள்…!!
இரட்டைக்குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் செய்ய முடியும்.’ என்ற தமிழ் சினிமா வசனம் போல், இரட்டைக் குழந்தைகள் என்றாலே முடி முதல் அடி வரை அனைத்தும் ஒரே போல்தான் இருக்கும். இப்படி இருக்கும் போது பிறந்த வருடம் மட்டும் எப்படி வேறு வேறாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பே.
இதோ அதற்கான பதில்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான மரிபெல், கடந்த வியாழன் அன்று பிரசவ வேதனையில் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஜெலின் என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது. அடுத்த சில நிமிடங்களில் ஜெலினின் தம்பியான லூயிஸ் பிறந்தான். ஆனால் அழுது கொண்டிருந்த தன் குழந்தைகளைக் கவனிக்காமல் அவரது அப்பாவான லூயிஸ் மருத்துவமனையில் இருந்த கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அதற்குக் காரணம் அரிதினும் அரிதான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம்தான். மேரிபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நொடியில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் புத்தாண்டு தினத்தின் கடைசி நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஜெலின் பிறந்தாள். அடுத்து லூயிஸ் பிறப்பதற்குள் கடிகார முள் 12-ஐத் தாண்டிவிட்டது.
எனவே, ஜெலின் பிறந்த ஆண்டு 2015, லூயிசுக்கோ அது 2016……
Average Rating