சண்டையை நிறுத்தினால் பேச்சு: லெபனான் அதிபர்
Read Time:48 Second
தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று லெபனான் அதிபர் எமிலி லஹெüத், வியாழக்கிழமை கூறியுள்ளார்.
இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் லெபனான் மீது குண்டுமழைப் பொழிந்து நாட்டு மக்களை படுகொலை செய்கிறது. சிறு தெருக்கள், ஆம்புலன்ஸýகள், பயணிகள் பஸ் மற்றும் லாரிகள் என்று கூடப் பார்க்காமல் கண்மூடித்தனமான தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது என்று பிரான்ஸ் இண்டர் ரேடியோவில் பேசிய எமிலி கூறியுள்ளார்.