பெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மச்சாவு: கணவர் கைது..!!

Read Time:3 Minute, 34 Second

downloadபெங்களூரில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகள் மேகனா (வயது 14). இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கிஷோர் (22) என்பவரும் காதலித்து வந்தனர். இதுகுறித்து இருவரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மேகனாவை அவருடைய தந்தை ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் கொண்டுபோய் விட்டார்.

இதுகுறித்து அறிந்த கிஷோர், மதனப்பள்ளிக்குச் சென்று மேகனாவை தன்னுடன் அழைத்து கொண்டு கர்நாடகத்திற்கு வந்தார். மேலும், மேகனா மாயமானதாக அவருடைய உறவினர் ஆந்திரா போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கிஷோர், மேகனாவுடன் மண்டியாவில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இதுகுறித்து அறிந்த கிஷோரின் தாய் அவர்கள் 2 பேருக்கும் ஒரு கோவிலில் வைத்து மாலைமாற்றி திருமணம் செய்து வைத்தார். மேலும், அவர்கள் 2 பேரையும் அவர் பெங்களூருக்கு அழைத்து வந்து ரகசியமாக தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை கிஷோர், மேகனாவின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவளை எலகங்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளோம் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்துபோன அவர்கள் எலகங்கா அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் அங்கு மேகனா பிணமாக கிடந்தாள். மேகனா விஷம் குடித்து இறந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மேகனாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 18 வயது நிரம்பாத மேகனாவை ஏமாற்றி கிஷோர் திருமணம் செய்து செய்து கொண்டதாகவும், அவளுடைய வாயில் விஷம் ஊற்றி கொலை செய்துள்ளார் என அவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து அவர்கள் எலகங்கா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தனர். மேகனா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது அவளுடைய வாயில் கிஷோர் விஷம் ஊற்றி கொலை செய்தாரா? என்பது குறித்து தெரியவில்லை. இதனால் அவருடைய சாவில் மர்மம் நீடிக்கிறது. இதுகுறித்து கிஷோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரத்திலிருந்த பெண்ணை பறவை என எண்ணி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…!!
Next post ஆப்கானிஸ்தானில் விமான நிலையம் அருகே தற்கொலை தாக்குதல்…!!